கருணாநிதி பற்றிய நிறைய நிலைதகவல்களில் அவரை நன்றாக கும்மி எடுத்துவிட்டு, கடைசியில் ஒரு வரி எழுதுகிறார்கள், “என்ன இருந்தாலும் அவரோட உழைப்பும் சுறுசுறுப்பும் யாருக்கும் வராது”.
சம்பந்தமில்லாத மற்றொரு நிகழ்வு:
திருமணமான புதிதில், சியாட்டில், வான்கூவர் சுற்றுலா சென்றிருந்தோம். நண்பன் பாலாவின் வீட்டில் தங்கியிருந்தோம். அவன் எங்கள் இருவரிடமும் ஒரு கேள்வி கேட்டான், எனக்கு என் மனைவியிடம் பிடித்தவை, அவளுக்கு என்னிடம் பிடித்தவை, என்னவென்று.
நான் தீவிரமாய் யோசித்து, எதையும் விட்டு விடாமல் (விட்டு விட்டு பிறகு வாங்கி கட்டிக்கொள்ள துணிவில்லாமல்), அவள் எனக்கு பிடித்ததை சமைப்பதில் இருந்து, அவள் கடைக்கு சென்றால் எனக்கென்று எதாவது வாங்கி வருவது வரை, ஒரு அரை மணி நேரம் பட்டியலிட்டேன். இப்போது அவள் முறை. அவள் சொன்னாள், “அவர் ஒரு முறை இட்லி சுட்டார், எல்லாம் ரவுண்டு ரவுண்டு ஆக வந்தது”. சரி மேலே சொல்லுவாள் என்று எதிர்பார்த்தேன், ம்ஹும் எழுந்து சென்றுவிட்டாள். பாராட்டுவதற்கு எதுவுமே இல்லாவிட்டால் அவளும் தான் என்ன செய்வாள், பாவம்.
No comments:
Post a Comment