கொள்கையின்
அடிப்படையில் திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். சென்ற
ஆண்டு tentkotta என்றொரு இணையதளம் படைப்பாளிகளுக்கு உரிய காசு குடுத்துவிடுவதைக்
கேள்விப்பட்டு காசு கட்டி அதில் இணைந்தேன். இணைப்பு வாங்கிய புதிதில் ஒருசில
படங்கள் பார்த்ததோடு சரி, அப்புறம் அதை அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை. இப்போதுதான் இரண்டு மாதங்களாய் அதில் தொடர்ந்து
படம் பார்க்க ஆரம்பித்துள்ளேன். திரைப்படங்களுக்கு ஐந்து நட்சத்திர தர வரிசைப்படி
பார்வையாளர்கள் மதிப்பீட்டும் முறையுள்ளது. குறைந்தபட்சம் மூன்று நட்சத்திர
மதிப்பீடு உள்ள திரைப்படங்களையே பார்ப்பதென்று முடிவெடுத்திருந்தேன். இப்படித்தான்
இரு தினங்களுக்கு முன் “முன்னோடி” என்றொரு படம், நான்கு நட்சத்திர அந்தஸ்து
பெற்றிருந்தது. இருபது நிமிடங்கள் பார்த்திருப்பேன் அப்புறம் முடியாமல் அணைத்துவிட்டேன்.
சரி நம் ரசனை பெருவாரியான ரசனையுடன் ஒத்துப்போகவில்லை என்றெண்ணி விட்டுவிட்டேன்.
இன்று பார்த்தால் அப்படத்திற்கு இரண்டு நட்சத்திர அந்தஸ்தே உள்ளது. முதல் நாள் நான்கு
பார்வையாளர்கள் அதற்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்தளித்திருந்தனர். சமுதாயத்தின் மீது
அவர்களுக்கு உள்ள கோபம் இப்படி வன்மமாக வெளிப்பட்டு எனக்கு மன உளைச்சலை
ஏற்படுத்தியுள்ளது. என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன், மற்றபடி பிற உயிர்களின்மேல்
அன்பு செலுத்த வேண்டுமென "சத்குரு" ஜக்கி கூறியுள்ளதால் அந்த நான்கு பேருக்கும் என்
அன்பு.

No comments:
Post a Comment