வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும், இனி வாழ்த்தப்போகும் அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றி. ஆயிரக்கணக்கில் குவிந்த வாழ்த்துகள் சற்றே மிதமான போதையை அளித்தது (சரி ஆயிரம் லட்சியம், நூறு நிச்சயம்னு புரிஞ்சுக்கங்க). பல வழிகளில் வாழ்த்து வந்து சேர்ந்தது, மின்னஞ்சல், பேஸ்புக், வாட்ஸ்ஆப், உள்பெட்டி அவ்வளவு ஏன், இருவர் புறாக்களின் காலில் கூட வாழ்த்தை கட்டி அனுப்பி இருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
அம்மா எனக்காக தஞ்சை கோவிலில் அர்ச்சனை செய்தார்கள். மனைவி கேக் வரவழைத்து வெட்ட செய்தாள். மகள் இனியா அடுப்படியில் இருந்த ஒரு சிறு மூட்டை உருளைக்கிழங்கை என்னிடம் குடுத்து, அப்பா, ஹாப்பி பர்த்டே, என்றாள். சூசமாக என்னை கவுச் பொட்டேடோ (couch potato) என்கிறாள்.
இவ்வளவு அன்பிற்கும் நான் தகுதியானவன் தானா என்று இன்று மாலை heiniken உதவியுடன் சுயபரிசோதனை செய்யலாம் என்றிருக்கிறேன். வயதாகிறது என்கிற கவலையை மறைக்க உதவிய உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும் மீண்டும் நன்றி.
-- ssk.

No comments:
Post a Comment